தமிழ்நாடு போயர் பேரவை

சமூகத்தைக் காக்கவும் !
உரிமையை மீட்டிடவும் !!
உங்களோடு என்றும் D.K.மூர்த்தியார்!!!

போயர் இன மக்களின் வாழ்விற்கும், உரிமைக்கும்,

சரியான அங்கிகாரம் கிடைத்திடவும் நமது வழிகாட்டியாகவும்,

நமது சமுதாய மக்களின் நலன் சார்ந்த விசயங்களில்

தன்னிகரற்ற போர் குணம் போராளி இப்படிப்பட்ட

மகத்தான தலைவரை நம் சமுதாய மக்கள்

கிடைக்கப் பெற்றதில் பெருமிதம் கொள்கிறோம்.

Untitled design (19)
Untitled design (18)
previous arrow
next arrow

மாநில பொது செயலாளர்
O.பெரியப் பொண்ணு

மாநில துணைப் பொது செயலாளர் K.நரசப்பன்

உலகெங்குங்கும் வாழும் நம் சமுதாய மக்களுக்கு வருடம் இரு முறை போயர் கல்யாண மாலை நகழ்ச்சிச்சியை தொடர்ந்து 5 ஆண்டுகளாக நமது தலைவர் மற்றும் நிர்வாகிகள் வெகு சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அதே போல இவ்வாண்டும்,

தமிழ்நாடு போயர் பேரவையின் சார்பில் 6 ம் ஆண்டு இலவச கல்யாணமாலை நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மதம் 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (07/09/25 )சேலம் திருவாகவண்டனூர் பைபாஸ் GVN கல்யாணமண்டபத்தில் நடைபெறும்.

ஐந்து போயர் கல்யாணமாலை நிகழ்ச்சி மூலம் இதுவ்ரை 350க்கு மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளது இந்த கல்யாணமாலை நிகழ்ச்சி போயர் மக்களின் நலனுக்காக சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.

நிகழ்ச்சி கலந்துகொள்ள பதிவு செய்ய பணம் வாங்கமாட்டார்கள் அணைத்து போயர் சொந்தங்களும் கலந்துகொள்ளலாம் கல்யாண தரகர்களுக்கு அனுமதி கிடையாது.

போயர் கல்யாணமாலை புத்தகம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். போயர் கல்யாணமாலை புத்தகம் விலை பின்னர் அறிவிக்கப்படும் கடந்த முறை 350 வரன்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது போயர் கல்யாணமாலைக்கான முன்பதிவு 02/07/25 - 02/09/25 .

முன்பதிவு செய்ய விரும்புவார்கள் 99404 63269 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பதிவு என்னை பெற்றுக்கொள்ளவேண்டும் .முன்பதிவு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை செய்யப்படும்

சமுதாய பணியில் ஆர்வமுள்ளவர்கள் இன்றே நமது பேரவையில் இணைந்து பணிபுரிய அழைக்கிறார் நமது மாநில தலைவர் D.K.மூர்த்தியார் !!!

தமிழகமெங்கும் தங்கள் ஊர்களில் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் போன்ற புதிய பொறுப்புகள் வழங்கி கௌரவிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். முதலில் தங்களின் விவரங்களை தொலைபேசி வாயிலாக தெரியப்படுத்தி உங்களின் சுய விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.